Corporate Vs People

கார்பொரேட் கம்பெனிகள் நம்மை முட்டாள்கள் ஆக்கிய கதையை கேளுங்கள்.. தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் முட்டாளாக்கிய கதை தெரியுமா…!!!
  1. சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் டியாபெடிக்ஸ் வரும் என்றார்கள்.
  2. அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும். சாதாரண உப்பை பயன்படுத்தினால் தைராய்டு வரும் என்றார்கள்.
  3. நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும். இல்லாவிடில் உடல் பருமனாகும் என்றார்கள்.
  4. இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது என்றார்கள்.
  5. ஆயில் புல்லிங் அறிமுகப்படுத்தினார்கள். இல்லாவிடில் பற்களில் கரை படிந்து வெண்ணிறமாக இருக்காது என்றார்கள்.
  6. காம்பிளான் குடித்தால் வளரலாம் என்றார்கள். நவதானியங்களை மறக்கடித்தார்கள்.
  7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
  8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா.. அரப்பு, சீகைக்காய் மறந்தோம். 
  9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி. பழைய கஞ்சி மறந்தோம்.
  10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ். நோய்கள் வர 2 நிமிடத்தில் வழி வகுத்தோம்.
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????..
 
இன்று அனைத்தும் விளம்பரம் தான். படித்தவர், படிக்காதவர் என அனைவரையும் முட்டாள் ஆக்குகிறார்கள். பிரபலங்களை அழைத்து நடிக்க வைகிறார்கள். அவர்களுக்கு நடிக்கும் பொருள் அதனுடைய விளைவு என ஏதும் யோசிக்காமல் நடிக்கிறார்கள். அவர்களுக்கு தேவை பணம் மட்டுமே. ஆனால் அதன் விளைவு பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஈர்க்க படுகிறார்கள்.
 
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின… அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்.
 
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமயம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது.
பின்விளைவு பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று.
 
அம்மி, ஆட்டுக்கல் என இருந்த நாம் இன்று மிக்ஸி, கிரைண்டர் என மாறிவிட்டோம். இது வரவேற்கத்தக்கதே. ஆனால் அன்று இருந்த பெண்கள் 60 வயதில் காய் கால் வலியை அனுபவித்தனர். ஆனால் இன்று ….. மிக்ஸி, கிரைண்டர் அவசர நேரத்தில் பயன்படுத்திவிட்டு, மீத நேரங்களில் அம்மி, ஆட்டுக்கல் பயன்படுத்தலாம். உடல் பலப்படும்.
 
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்.
 
பின்விளைவு , அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து.
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா?? மைதா..
 
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம்..ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல் டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.
 
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள்..
நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்..
 
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல… மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..!!
 
யோசியுங்கள் மக்களே.. திரும்புங்கள் நமது முன்னோர்கள் வகுத்த வழிக்கே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here