இன்றைய உலகில் நாம் அதிகமாக சாப்பிடுவது fast food. நாம் இதனுடைய சுவைக்கு அடிமையாகி விட்டோம். அந்த வகையில் French Fries எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை குழந்தைகளுக்கு மாலை நேர snacks ஆகா கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 • உருளைக்கிழங்கு – 4
 • எண்ணெய்
 • உப்பு
 • சோள மாவு (corn flour) – 1/4 cup

செய்முறை:

  1. முதலில் உருளைக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை நன்றாக மசிக்கவும். பின்பு இதனுடன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. நீங்கள் french fry machine உபயோகிக்கலாம் அல்லது முறுக்கு செய்யும் கருவியில் மசித்த உருளை கிழங்கை வைத்து பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  4. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான உடன், நாம் பிழிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு பொரித்து எடுக்கவும். பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்.

  5. அவ்வளவுதான், மொறுமொறுப்பான மற்றும் நீண்ட Fernch fries ready.

  6. இதனுடன் tomato ketchup சேர்த்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

உங்களது சமையல் குறிப்புகளை எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய ஈமெயில் – [email protected]

Leave feedback about this

 • Rating