தேவையான பொருட்கள்:
தனியா – அரை கிலோ குண்டு மிளகாய் – கால் கிலோ
துவரம்பருபு்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
வெந்தயம் – 20 கிராம்
விரளி மஞ்சள் – 50 கிராம்
செய்முறை:
தேவையான பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். அதுவே மழைக்காலமோ பனி காலமாகவோ இருந்தால் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே உலர்த்தி, தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.
பொடி அரைக்கும்முன் மில்லில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு முன்னால் அந்த மெஷினில் வேறு ஏதேனும் சுாம்பு கலந்து பொடி அரைக்கப்படாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்காதீர்கள். அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி.

Tamil quotes, Tamil recipes, Tamil celebrity quotes, Tamil Inspirational quotes, Tamil Motivational quotes