தேவையான பொருட்கள்:

 • சிக்கன் -1 கிலோ
 • மாவு -1 / 2 கப்
 • மிளகாய் வற்றல் – 5 அல்லது 6
 • பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
 • பூண்டு -7 அல்லது 8
 • இஞ்சி -1
 • சின்ன வெங்காயம் – 9 அல்லது 10
 • பச்சை மிளகாய் – 6 அல்லது 7
 • எலுமிச்சை – 1/2 துண்டு
 • தேங்காய் – 1/2 மூடி – துருவி கொள்ளவும்
 • கரம் மசாலா -1 டீஸ்பூன்
 • மிளகு தூள் -1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் -1 / 2 டீஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

 1. முதலில் மிளகாய் வற்றலை கழுவி, சோம்பு, உரித்த பூண்டு, இஞ்சி, உரித்து கழுவிய சின்ன வெங்காயம் சேர்த்து மை அரைத்து கொள்ள வேண்டும்.
 2. சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். சிக்கன் துண்டுகளில் சிறிய கீறல்கள் போட வேண்டும். அப்பொழுது தான் மசாலா நன்கு சிக்கனில் சேரும் .
 3. எலுமிச்சை அறுத்து சாறு எடுத்து கொள்ளவும்.
 4. கார்ன் பிலௌர் மாவு, கரம் மசாலா,மிளகு தூள்,மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
 5. இதனுடன் அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலக்கவும்.
 6. பின்னர் இந்த கலவையில் சிக்கன் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காயை வருத்து தனியே எடுத்து கொள்ளவும்.
 8. கருவேப்பிலை, பச்சை மிளகாய் – இறண்டையும் எண்ணெயில் வருத்து தனியே எடுத்து கொள்ளவும்.
 9. பிறகு ஊற வாய்த்த சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 10. பிறகு பொறித்த சிக்கன், வறுத்த தேங்காய் துருவல், வறுத்த கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சூடாக பரிமாறவும்.
kerala style payyoli chicken

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here