lemon pickle, recipes of lemon pickle, nimbu ka achar, lime pickle recipes, lime pickle, sweet lemon pickle, lemon pickle recipe in tamil
ஊறுகாய் பாரம்பரியமான உணவு . பழைய சாதம் வச்சு ஊறுகாய் சாப்பிட்ட, எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பாடு சாப்பிடுவாங்க. தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் என அணைத்து வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடு டிஷ் ஊறுகாய் .
தேவையான பொருட்கள்:
6 Numbers நறுக்கிய எலுமிச்சை
1 கப் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
தேவையான அளவு மிளகாய் பொடி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
எலும்பிச்சை யை நான்கு பாகமாக அறுத்து, நன்றாக உப்பு சேர்த்து 2 அல்லது 3 நாட்கள் ஊற வைக்கவும் .
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் ஊற வைத்த லெமனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மற்றொரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.
லெமன் நன்றாக வெந்ததும் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். மிதமான சூட்டில் 5-6 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும் .
இப்பொழுது காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள். தண்ணீர் சேர்க்காதீர்கள். இதனால் உங்கள் ஊறுகாய் கெட்டுப் போய் விடும்.
இப்பொழுது அரைத்து வைத்த வெந்தய கடுகு பவுடரை சேர்த்து நன்றாக கிளறுங்கள். 2-3 நிமிடங்கள் கிளறவும் . அந்த மசாலா மனம் போகும் வரை .
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு லெமன் ஊறுகாயை காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள்.
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...
super Recipe