Maaveeran napoleon love story in tamil

இன்றைக்கு நாம் படிக்க போகும் காதல் கதை மாவீரன் நெப்போலியன் கதை. இவர்களின் காதல் ” கடிதத்திற்கு ” பெயர்போனது.

1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் ராணுவத்தின் பீரங்கி பிரிவில் ராணுவ ஜெனரல் ஆகா இருந்தவர் நெப்போலியன். அப்போது அவருடைய வயது 26. அதே நேரம் அவருடைய வயதில் இருந்த மற்ற இளைஞர்கள் வேலை இல்லாமல் வேலை தேடி கொண்டு இருந்தனர். மற்றும் பலர் காதல், கல்யாணம் என் சுற்றி கொண்டு இருந்தனர். ஆனால் நெப்போலியன் மனதில் முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருந்தது. அதனாலே அந்த வயதில் அவருக்கு அந்த வயதில் காதலும் இல்லை, காதலியும் இல்லை.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டுருக்க, நெப்போலியனுக்கு அவருடைய உயர் அதிகாரியுடன் நட்பு ஏற்பட்டது. ஒரு நாள் அந்த உயர் அதிகாரி தன வீட்டின் விருந்திற்கு நெப்போலியனை அழைத்தார். நெப்போலியனுக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் விருந்திற்கு செல்ல மிகவும் பிடிக்கும்.

மறுநாள் விருந்திற்கு நெப்போலியன் சென்றார். அங்கு ஒரு அழகான பெண் நெப்போலியனை வந்து சந்தித்து பேசினாள். “நீங்கள் தன நெப்போலியனா, உங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லை என்றால் பிரான்ஸ் மிலிட்டரி இல்லையாமே .. ” என்று. நெப்போலியனுக்கு இந்த புகழ்ச்சி மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

அந்த பெண் ரோஸ் அவ்வளவு பேரழகி எல்லாம் கிடையாது. ஆனால் நேர்த்தியான உடை, கவர்ச்சியான பேச்சு என இருப்பாள். இதுனாலேயோ என்னவோ அந்த பெண்ணை நெப்போலியனுக்கு பிடித்து போனது. இந்த நட்பை அவர் தொடர நினைத்தார்.

napoleon love story
Joséphine de Beauharnais by Andrea Appiani

அடுத்து சில நாட்களில் இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். நெப்போலியன் அந்த பெண்ணிற்கு செல்ல பேர் வைத்தார். அவளின் உண்மையான பெயர் Marie-Joseph-Rose de Tascher de La Pagerie. அதை சுருக்கி Josephine என அழைக்க ஆரம்பித்தார்.

napoleon love story

இப்படியே இவர்களின் சந்திப்பு போய்க்கொண்டிருக்க, ஒரு நாள் நெப்போலின் அந்த பெண்ணிடம் ” நாம் திருமணம் செய்து கொள்ளலாமா ” என கேட்டார். Josephine அதை எதிர்பார்க்கவே இல்லை. அந்த பெண் இதை அந்த உயர் அதிகாரியிடம் கூறினாள். இவள் ஏன் இதை அந்த அதிகாரியிடம் கூற வேண்டும். ஏனெனில் இங்கு நடந்த அனைத்துமே திட்டமிடப்பட்டது, விருந்திற்கு அழைக்கப்பட்டது முதல் இந்த பெண்ணின் பேச்சு, சந்திப்பு என அனைத்துமே திட்டமிடப்பட்டவை.

Josephine ஏற்கனவே திருமணமான பெண். அவளுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். முதல் கணவர் உயிருடன் இல்லை. நெப்போலியன் உடன் பழகுவதற்கு முன்பாகவே Josephine சில பிரெஞ்சு உயர் அதிகாரிகளுடன் பழக்கத்தில் இருந்தாள். அதில் ஒரு அதிகாரி தான் இத்திட்டத்தை உருவாக்கியது.

ஜோசஃபின் அந்த அதிகாரியிடம் ” நெப்போலியன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ” கூறியதை சொன்னாள். அந்த அதிகாரி ” உனக்கு 32 வயது ஆகிறது உன் பிள்ளைகளை உன்னால் கவனிக்க முடியவில்லை. நீ நெப்போலியன் ஐ திருமணம் செய்து கொள்வதே நல்லது.” என்றார். ஆனால் ஜோசஃபின் க்கு இதில் விருப்பம் இல்லை.

காரணம் அந்த காலத்திலும் மேல்மக்கள், கீழ்மக்கள் என் பிரித்திருந்தனர். நெப்போலியன் கீழ்வகுப்பை சார்ந்தவன். இதுவே நெப்போலியனை ஏற்காததற்கு காரணம். இருப்பினும் சூழ்நிலை காரணமாக அவளுக்கும் நெப்போலியனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ஜோசஃபின் மகனுக்கு 15 வயது. மகளுக்கு 14 வயது. ஜோசஃபின் க்கு 32 வயது. நெப்போலியன் க்கு 26 வயது. இந்த வயது வித்தியாசத்தினால் சக ராணுவ வீரர்கள் நெப்போலியனை கிண்டல் செய்வார்கள்.

திருமணம் முடிந்த 2 நாட்களில் நெப்போலியன் இத்தாலி க்கு போர் விஷயமாக செல்ல வேண்டி இருந்தது. செல்லும் பொது ஜோசஃபின் இன் ஓவியம் ஒன்றை தன்னுடன் எடுத்து சென்றார். அங்கு சென்றதும் அடிக்கடி ஓவியத்தை பார்ப்பார். கடிதங்களின் மூலம் தான் காதலையும், பிரிவையும், அவளை பிடிக்காத தான் குடும்பத்தாரிடம் அவளை விட்டு வந்ததற்கு மன்னிப்பும் கேட்பார்.

ஆனால் அங்கு ஜோசஃபின் கொஞ்சம் கூட காதல் மற்றும் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பாள். சில நாட்களில் மது, கேளிக்கை என தன ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தாள். நெப்போலியனின் ஒரு சில கடிதங்களுக்கே அவள் பதில் கடிதம் எழுதுவாள். சில நாட்களில் அவையும் இல்லாமல் போகின. நெப்போலியனின் கடிதத்தை படிக்கச் கூட நேரம் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தாள்.

திருமணம் முடிந்த 2 நாட்களில் நெப்போலியன் இத்தாலி க்கு போர் விஷயமாக செல்ல வேண்டி இருந்தது. செல்லும் பொது ஜோசஃபின் இன் ஓவியம் ஒன்றை தன்னுடன் எடுத்து சென்றார். அங்கு சென்றதும் அடிக்கடி ஓவியத்தை பார்ப்பார். கடிதங்களின் மூலம் தான் காதலையும், பிரிவையும், அவளை பிடிக்காத தான் குடும்பத்தாரிடம் அவளை விட்டு வந்ததற்கு மன்னிப்பும் கேட்பார்.

ஆனால் அங்கு ஜோசஃபின் கொஞ்சம் கூட காதல் மற்றும் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பாள். சில நாட்களில் மது, கேளிக்கை என தன ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தாள். நெப்போலியனின் ஒரு சில கடிதங்களுக்கே அவள் பதில் கடிதம் எழுதுவாள். சில நாட்களில் அவையும் இல்லாமல் போகின. நெப்போலியனின் கடிதத்தை படிக்கச் கூட நேரம் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தாள்.

இவ்வாறு இருக்க நெப்போலியன் போர் முடித்து பிரான்ஸ் க்கு திரும்பினார். வந்தவுடன் அவன் வீட்டில் அனைவரும் ஜோசஃபின் பற்றி தவறாக கூறினர். ஆனால் இதை நெப்போலியன் நம்பவே இல்லை. பின் நெப்போலியன் குடும்பத்தினர் உனக்கு வாரிசு என ஒன்று வேண்டும் உனக்கு இப்பொது குழந்தைகள் இல்லையே என கேட்டனர். அப்போது நெப்போலியன் கூறிய பதில் ஜோசஃபின் கு காதலை உணர்த்தியது.

அவர் கூறியதாவது ” எனக்கு பிறந்தால் தன என் வாரிசு என இல்லை. எனது மனைவியின் குழந்தைகளும் என் குழந்தைகள் என கூறி, ஜோசஃபின் மகளின் மகனை தனது வாரிசாக அறிவித்தார். இதை கேட்ட ஜோசஃபின், தான் மீது இவ்வளவு காதலா, தான் தவறு செய்து விட்டதாக எண்ணி வருந்தினாள். அன்று இரவு இத்தாலியில் இருக்கும் போது, அனுப்பிய கடிதங்களை படிக்க ஆரம்பித்தாள். இவ்வளவு நாட்கள் புரியாததை அந்த கடிதங்கள் அவளுக்கு நிறைய புரிய வைத்தன. நெப்போலியனுக்கு அவன் எதிர்பார்த்த காதலை குடுக்க நினைத்தாள்.

ஆனால் விதி அவ்வாறு நினைக்கவில்லை. நெப்போலியன் மறுபடி இத்தாலி செல்ல வேண்டி இருந்தது. ஆனால் போகும் போது ஜோசஃபின் கு பிரெஞ்சு அதிகாரிகளிடம் செய்ய வேண்டிய வேலை ஒன்றை கொடுத்து சென்றிருந்தார். ஜோசஃபின் வேலை முடிந்தவுடன் இத்தாலி செல்ல நினைத்தாள்.

அங்கு நெப்போலியன் இத்தாலி சென்ற பின்பு, அங்கு ஜோசஃபின் இன் பழைய உறவுகள் பற்றி தெரிய வந்தது. இதை உண்மையா என அறிய தன் நண்பனை அனுப்பி வைத்தார். நண்பர் வந்து பிரெஞ்சு அதிகாரியுடன் ஜோசஃபின் உறவு உண்மை என கூறினார்.

நெப்போலியனுக்கு உலகமே இருண்டது போல் ஆனது. தனது காதல் மனைவி செய்த துரோகத்தை எண்ணி கோபம் கொண்டார். பழிவாங்க எண்ணினார். அதன் பின்பு நிறைய பெண்களுடன் உறவு என இருந்தார். ஜோசஃபின் இத்தாலி க்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். ஜோசஃபின் அதிர்ந்து போனாள்.

அடுத்த 2 வருடங்களில் பிரான்சின் அரசனாக பொறுப்பேற்றார். அப்போதும் ஜோசஃபின் ய்யே அரசியாக முடிசூட்டினார். கொஞ்ச நாளில் நெப்போலியனின் வாரிசாக இருந்த சிறுவன் மர்ம நோயில் இறந்து போனான். அரசருக்கு வாரிசு வேண்டும் என் அனைவரும் கூறினார். அப்போது ஜோசஃபின் ஐ விவாகரத்து செய்து வேற பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தன. விவாகரத்துக்கு பின்னர் ஜோசஃபின் நெப்போலியன் நினைவாகவே இருந்து இறந்து போனார். நெப்போலியனும் ஒரு கட்டத்தில் இரைப்பை புற்றுநோய் வந்து இறந்து போனார். கடைசி நொடிகளில் கூட நெப்போலியன் கூறியது “நெப்போலியன் பிரான்சின் ராணுவம், ஜோசஃபின் அந்த ராணுவத்தின் தலைவி”. கடைசி மூச்சு வரை தன் காதல் மனைவியை நினைத்து உயிர் நீத்தார் மாவீரன் நெப்போலியன்.

napoleon love story, maaveeran napoleon love story in tamil, napoleon story in tamil, tamil quotes

Leave feedback about this

  • Rating